Thursday, 26 January 2017

கட்டு மந்திரம் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம் நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம் நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம் மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் திக்கு கட்டு 1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் 2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும் 3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும் 4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும் 5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும் குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம் பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே பொருப்பு இருப்பாக கொண்டேனே சிவன் சிவமாக கொண்டேன் சிவன் இருந்தவாறே உடல்கட்டு ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல் கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல் சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல் காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல் என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா (திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்) கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும் 1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும் 2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும் 3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும் 4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும் 5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும் தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் இராகு மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் காணவேராகு திசை வருஷம் பதினெட்டு     கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்திதோணவே மாதமது முப்பத்திரண்டு     துகையான நாளதுவும் பனிரெண்டாகும்யேனவே சத்துருவால் நிவந்தனையோடும்     யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழ்போனவே பழம் பொருளும் வேதமாகும்     பிலமான நோயதுவும் கூடிக்கொல்லும் சிறப்பு மிக்க இராகு மகாதிசையானது 18 ஆண்டுகளாகும். இதில் இராகுவின் பொசிப்புக் காலம் அதாவது சுயபுத்தியானது 2 வருடம் 8 மாதம் 12 நாள்களாகும். இக்காலகட்டத்தில் சத்துருக்களால் தொல்லைகளும் நிபந்தனையோடும் எண்ணமுள்ளவனாய் மனைவி இருப்பது கண்டு மனம் வெதும்புதலும், குடியிருக்கும் மனைபாழாதலும் மூதாதையர் சேர்த்து வைத்த பழைமையான கலைப்பொருள்களும் தம் பொருளும் சேதமாகி விரயம் காட்டும். அதுமட்டுமல்லாமல் பலமான பிணியுண்டாகி உயிர்க்குக் கேடு செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் கூடியே ராகுதிசை வியாழபுத்தி     குணமுள்ள மாதமது யிருபத்தெட்டும்நாடியே நாளதுவும் மூவெட்டாகும்     நலமுள்ள ராசரால் நன்மையுடன் வாழ்வன்தேடியே தெரிவையரும் சோபனமேயாகும்     தெகுட்டாத புத்திரனும் தென்புடனேவாழ்வான்பாடியே பாக்கியமும் பவுசிகளுண்டாம்     பலன் தரும் பூமிமுதல் யோகந்தானே இவ்விராகு திசையில் வியாழ புத்திற்குரிய காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்காலத்தில் இச்சாதகனுக்கு அரசரால் நன்மையுண்டாகும். பெண்களால் சுபசோபனங்கள் ஏற்படுதலும் புத்திரோற்பத்தியும் ஏற்படும். அதனால் மனத்தில் தெம்பும் மகிழ்ச்சியும் மிகுந்து காணும். பலவிதமான பாக்கியங்கள் ஏற்படுவதோடு சமுதாயத்தில் அந்தஸ்து மிகுதலும், வெகுதனம் வாய்த்தலும் பூமி லாபமும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். இராகு மகாதிசை, சனி புத்திப் பலன்கள் தானென்ற ராகுதிசை சனிபுத்திகேளு     தன்மையில்லா மாதமது முப்பத்தினாலுநானென்ற நாளதும் ஆறதாகும்     நலமில்லாப் பிரமை கொண்டு நாடுநகர் திரிவன்கோனென்ற பிதுர் பீடையுண்டாகும் பாரு     கொடியிடையாள் நோவாகும்குழந்தையது சாவாம்தேனென்ற தேவதையின் இடஞ்சலுண்டாகும்     தெண்டமுடன் சத்துருவும் திரவியங்கள்சேரும். இராகு மகாதிசையில் சனிபுத்தியின் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகன் நன்மை இல்லாதவனாகப் பிரமை பிடித்தவனைப் போல் பலதேசமும் சென்று திரிவான். பூர்வபுண்ய வசத்தால் பிதுர்களினால் பீடை ஏற்படும். கொடிபோலும் இடை யுடைய மனைவிக்கு நோய் உண்டாதலும் குழந்தை மரணமும் உண்டாகும். குலதெய்வத்தால் இடைஞ்சல் ஏற்படும். பலவகையில் விரயங்கள் ஏற்படும். சத்துருக்களின் தொகைமிகுவதே போல வெகு தனலாபமும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் சேதமில்லா ராகுதிசை புதனார் பத்து     செப்புநாள் மாதமது முப்பதாகும்பாதமில்லா நாளதுதான் பதினெட்டாகும்     பகுத்தறிவும் அதன்பலனை பகரக்கேளுவாதமில்லா வாணிபஞ் செட்டாகும் பாரு     வகையான சகோதரமுடன் வாழலாகும்பேதமுடன் பொருளுண்டாம் பூமிலாபம்     பொங்குமால் புத்திரனில் புகழ் ரொம்பபாரே மேலும் இவ்விராகு திசையில் புதனது புத்தி 2 வருடம் 5 மாதம் 18 நாள்களாகும். அக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன் கேட்பாயாக; பின்னமில்லா வகையில் வாணிபமும் செய்தொழிலும் செழிக்கும். சகோதரர்களுடன் மனமொன்றி வாழ்தலும் நேரும். பிறருடன் சிற்சில மனபோதங்கள் ஏற்படினும் தனலாபமும் பூமி லாபமும் மேலோங்கிப் பெருத்தலோடு புத்திரரால் புகழும் பெருமையும் மிகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள் பாரேநீ ராகுதிசை கேதுபுத்தி     பகருகின்ற மாதமது பனிரெண்டாகும்சேரேநீ நாளதுவும் பதினெட்டாகும்     செலுத்துகின்ற அதன்பலனை செப்பக்கேளுஊரே நீவிரோதமுடன் சத்துருவுண்டாம்     உடன்கேடு பண்ணிவைக்கும் உண்மைபாருதேரே நீ திரவிங்கள் யேவலுடன் சேதம்     தீதான காயங்கள் தேகத்தில் காணும் இனி, இராகு திசையில் கேதுபகவானின் புத்தி ஒரு வருடம் பதினெட்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: எவ்விடத்திலும் விரோதம் ஏற்படுதலும் அதனால் பகைவர்கள் பெருகிக் காணலும் நேரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை கேட்டினையே செய்தலும் ஏவல், பில்லி முதலியவற்றால் திரண்ட திரவியங்கள் சேதமாதலும் தேகத்தில் தீராப்பிணிக்குரிய அடையாளங்களும் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன் இராகு மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி     கணக்கான மாதமது ஆறாறாகும்கோணவே அதன்பலனைச் சொல்லக்கேளு     தோகையர்கள் தன்னாலே சுகமாகும் பாருபூணவே பூமிமுதல் பொருளுஞ்சேரும்     புகழ்பெற்ற அரசரால் சந்தோஷமாகும்ஊனவே வியாதியது பீடிப்பாகும்     உடன்கேடு வேந்தனால் கலகமாமே. இராகு திசையில் சுக்கிர பகவான் பொசிப்புக் காலம் 3 வருடங்களாகும். இக்காலத்தில் சாதகனுக்கு நிகழும் பலன்களாவன: மயில் போலும் சாயலையுடைய பெண்களால் இன்பம் விளையும். பூமி லாபம் ஏற்படுதலும் நிறைவான பொருட் சேர்க்கையும் புகழ்மிக்க அரசர்களால் சுப சந்தோஷங்களும் ஏற்படும். எனினும் வியாதி பீடிப்பதும் அதன் காரணமாகக் காரியக்கேடு ஏற்படுதலும், அரசனால் கலகம் விளையும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் ஆகுமே ராகுதிசை சூரியபுத்தி     அருளில்லா மாதமது பத்தேயாகும்யேகுமே நாளதுவும் மூவெட்டாகும்     யென்ன சொல்வேனதன் பலனை யியம்பக்கேளுபோகுமே சத்துருவால் வியாதிகாணும்     பொருள் சிலவு பூமிமுதல் சேதமாகும்சாகுமே நாள்தோறும் சண்டையாலே     சதிரான பூமிமுதல் காலிபோமே. இவ்விராகு திசையில் சூரிய பகவானின் பொசிப்புக் காலம் கருணை தராத காலமே. இக்காலம் 10 மாதம் 24 நாள்களாகும். தீய சத்துரு ஏற்படுதலும், உடல் நலத்தைக் கெடுக்கும் வியாதி நேர்தலும் அதனால் பெரும் பொருள் செலவும் பூமி முதலிய விரயமுமாகும். ஒவ்வொரு நாளும் சண்டையிடுதலாலே சாவு நேர்தலும் பெருமை மிக்க பூமி அழிதலும் கன்று காலிகள் மாய்தலும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் காலியென்ற ராகுதிசை சந்திரபுத்தி     கனமில்லா மாதமது ஈரொன்பதாகும்விதமில்லா மனைவி தன்னால் பொருளுஞ்சேதம்     வாலியென்ற குரங்கது போல் மாண்டுபோவான்வகையான தேசம்விட்டு அலைவது பாரு     மாலையென்ற மனைவியால் சுகபோகமில்லைமிகையான செல்வமதும் விரையமாகும்     மக்கள் முதல் மாடுடன் கோடாங்கேளே இராகு பகவானின் திசையில் சிறப்புத்தராத சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 6 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: இன்னவிதம் என்று சொல்ல இயலாத வகையில் இதம் அறிந்து நடந்திடாத மனைவியால் பெரும் பொருட் சேதமும் இராமகாதையில் வரும் வாலியினைப் போல இச் சாதகன் மாண்டு போதலும் உண்டு. சுய தேசத்தைவிட்டு பரதேசத்தில் அலைந்து திரிதலும் மனைவியால் நற்சுகம் அடைதலும் இல்லாது போகும். மேலும் மக்களால் தான் அடைந்த பிற செல்வங்களாலும் கன்று காலிகளாலும் கேடே விளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். இராகு மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் கேளப்பா ராகுதிசை செவ்வாய்புத்தி     கேடான நாளதுவும் வருஷம் ஒன்றுநாளப்பா நாளதுவும் பதினெட்டாகும்     நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளுஆளப்பா அக்கினியும் சோரபயமுண்டாம்     அடிபணியும் தேவதையால் அவதியுண்டாம்பாளப்பா பாவையரும் பலனுந்தீதாம்     பாழாகும் பொருள் சிலவும் பலவிதமுந்தானே இனி, இவ்விராகு திசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் கேடுதருவதே. அதுவும் 1 வருடம் 18 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நன்மை நேராது. அப்பலன்களாவன: அக்கினியாலும், திருடர்களாலும் வெகுபயம் உண்டாகும். குலதெய்வத்தின் சாபத்தால் மிகுந்த அவதி உண்டாகும். பாவையரால் ஏற்படும் பல தீங்குகளால் வெகுதன விரயம் ஏற்படும். பலவகையிலும் பொருட் செலவு உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment