Sunday, 22 January 2017

புதுக்கோட்டையில் பிறந்த நாங்கள்

மீண்டும் ஒரு துரோகத்தைச் செய்தது புதுக்கோட்டை..
மதுரையிலும், மதுரைக்கு தெற்கிலும் 'நான் புதுக்கோட்டையில் இருந்து வருகிறேன்' என்று சொன்னால், அந்த மக்கள் கேட்கும் முதல் கேள்வி,
"எந்த புதுக்கோட்டை ?
வீர பாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த தொண்டைமான் புதுக்கோட்டையா??" என்பதுதான்..
ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சம் தேடி புதுக்கோட்டை வந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, அன்றைய புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
விளைவு கட்டபொம்மன் கயத்தாறிலே, வெட்ட வெளியிலே தூக்கிலிடப் பட்டான்.
இன்று அதே துரோகம் மீண்டும் அரங்கேறி விட்டது.
'வாடிவாசலை திறக்க மாட்டோம்' என போராடியதால், மதுரை, திண்டுக்கல், தஞ்சை, கோவை என தமிழகம் எங்கும் சல்லிக்கட்டு நடக்காத நிலையில்,
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், புதுக்கோட்டை சி.விசயபாஸ்கர் தன் சொந்த கிராமம் இராப்பூசலில், தன் உறவினர்கள், ஊர்க்காரர்களைக் கொண்டு சல்லிக் கட்டு நடத்தி முடித்து விட்டார்.
மீண்டும் தமிழர் வரலாற்றில் அழியாத துரோகத்தைச் செய்து விட்டது புதுக்கோட்டை..
இந்திய விடுதலைக்குப் பின், மன்னர் ஆட்சி ஒழிப்பு வந்தபோது,
முதன் முதலாக இந்தியாவுடன் ஓடிப் போய் இணைந்த அதே புதுக்கோட்டை,
இன்று மற்றுமொரு துரோகத்தை நிகழ்த்தி விட்டது..
சல்லிக்கட்டு மட்டுமல்ல, ஈழப் போராட்டத்திற்கும் காலம் காலமாக துணை நின்ற,
உலகிலேயே முதன் முதலாக "விடுதலைப்புலிகள் தோழமைக் கழகம்" அமைத்து, தமிழ் ஈழ விடுதலைக்கு வலு சேர்த்த புதுக்கோட்டை மக்களும், மாணவர்களும், இளைஞர்களும் இன்று உலகத் தமிழர்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கிறோம்..
'போராடிய மக்களே சல்லிக் கட்டு நடத்திக் கொள்ளட்டும்' என இருக்காமல், அந்தந்த ஊர்களில் அமைச்சர்களே முன்னின்று நடத்துவார்கள் என்று சொன்னதன் அரசியல் இப்போது புரிகிறதா??
தமிழர்கள் ஒருபுறம், மத்திய, மாநில அரசுகள் மறுபுறம் என இருந்த போராட்டம் ,
இன்று தமிழர்கள் ஒருபுறம், அதிமுக / தமிழக அரசு மறுபுறம் என நமக்குள் மோதிக் கொள்ள வழி அமைத்து விட்டது...
வெட்கப்படுகிறோம் ..!
வெட்கப்படுகிறோம் ..!
புதுக்கோட்டையில் பிறந்த நாங்கள்...!!

No comments:

Post a Comment